Friday, January 28, 2011

பயப்படாதே

பயமுறுத்துகிறது
உன் மௌனம்..
பயப்படாதே என்கிறது
உன் நினைவு..

*

பெருங்குரலெடுத்து
அழத் துணியமாட்டேன்
சந்தர்ப்பங்கள்
சாதகமாகி
எனக்கான கனவுகள்
சாத்தியமாகும் நாள் வரும்..
அதற்குள் ஏன் அழுத் தீர்க்க வேண்டும்?

*

எந்த வேறுபாடும் இல்லை
தாக்குவதற்கும் ஆயுதமும்
காப்பதற்கு மருந்தும்
கொடுக்கிற
நாட்டிற்கும் உனக்கும்.. 

ஆவி

ஆவியாகிக் கொண்டிருக்கிறது
நாம் காதல்
திடப்பொருளிலிருந்து
திரவமாய் மாறி
வாயுவாகவும் ஆனபின்னே
எப்படிக் கண்டெடுக்க போகிறாய் ?
உன் சுவாசத்தில்
எப்போதாவது என் வாசம்
உணர்ந்தால் புரிந்துகொள்
அது நாம் காதலில் வடிவமென..

எறும்பு

எறும்புகளுக்கு தாகமெடுக்குமா?
தெரியவில்லை 
எறும்புகள் தண்ணீர் குடித்தும்
பார்த்ததில்லை..
எறும்புகள் எப்போது தூங்கும்
யாருக்கும் தெரியாது..
எறும்புகள் புறணி பேசுமா?
எறும்புகள் படம் பாருக்குமா?
பாட்டு கேட்குமா?
எறும்புகள் அழுமா? சிரிக்குமா?
எறும்புகள் கவிதை எழுதுமா?
புத்தகம் வாசிக்குமா?
எறும்புகளை பின் தொடரவும் முடியாது..
யோசித்து முடிவு செய்தேன்..
நாளை நானும் எறும்பாய் மாறுவதென..

குறுக்குவழி

குறுக்குவழி தெரிந்திருக்கவில்லை
இரவுகளில் உன்னை வந்தடைய
நீண்ட நேரமாய் நடந்தே வருகிறேன்
பாதி இரவுகளைக் கூட
இன்னும் நெருங்கவில்லை
இன்றயை இரவில்
அல்லது நாளைய இரவில்
அல்லது அதற்கு மறுநாள் இரவில்
வந்து சேர்ந்திருப்பேன் உன்னிடம்
அந்த நள்ளிரவில் புரண்டு படுக்கும்போது
உணர்வாய் என் ஸ்பரிசத்தை..

கறாரான வார்த்தை

நீ இந்நேரம்
தூங்கியிருக்கக் கூடும்..
நான் இன்னும் தூங்கவில்லை
ஆனபோதும்
விடியத்தான் போகிறது..
இருவருக்கும் ஒன்றாக..

*

கேள்வித்தாளை வாங்கியவுடன்
விறுவிறுவென்று
பதில் எழுதிட வேண்டுமெனும்
வேகத்துடனே இருக்கிறது..
உன் கறாரான வார்த்தைகள்..
ஆற அமர
ஓடியாடித் திரும்பும்
பள்ளிக் குழந்தையென
துள்ளிக் குதிக்கிறது என் வார்த்தைகள்.



காதல் - 6


காதல் - 5


காதல் - 4


காதல் - 3


காதல் - 1


காதல் - 2



Tuesday, January 25, 2011

கிராமத்தின் சாலை


நகர்கிறது
வாகன நெரிசலடங்கிய
நூறடி பாதையிலும்
போக்குவரத்தற்ற
கிராமத்தின் சாலைகளிலும்...

புன்னகைக்கிறது
விதைக்கும் போதே
பேரம் பேசும்
பெரு வணிகத்திலும்
விளைந்த பின்னும்
பேரமின்றி
கொடுத்துச் செல்லும்
சிறு வணிகத்திலும்

அழுகிறது
ஆயிரம் பேர்
கூடியிருக்கும் கூட்டத்தின் மத்தியிலும்
யாருமற்ற இரவின் தனிமையிலும்

விளையாடுகிறது
ஒரு சொல்லை பந்தாடி
சுக்குநூறாக்கியும்..
ஒரு கனவை உருவாக்கி
தகர்த்தும்..

அமைதியாகிறது
தேற்ற யாருமில்லாத போதிலும்
தோற்ற வேதனையின் மிச்சத்திலும்..

சுழன்றாடுகிறது
வென்றுவிடுவதெனும் தீர்மானத்துடனும்
கட்டுக்கடங்காத வேகத்துடனும்..

எல்ல்லாம் வாய்த்திருக்கிறது
நீ நினைப்பதற்கும்
நான் நிகழ்த்துவதற்கும்
மத்தியில்..

தனிமை


மரத்துப் போய்விட்ட
என்னை
எப்போதும் மீளமைக்க முடியாது
உன் காதலாலும் ..
*

உயிர்த்திருப்பதற்கான
உபாயமொன்றை
உனக்கு தெரிந்திருந்தால்
தைரியமிருந்தால்
அருகில் வந்து சொல்..
இல்லையெனில்
அங்கேயே நில்..
வருகிறேன்..
எனக்கு தெரிந்த உபாயமொன்றை
உனக்கு சொல்ல..
*

நான் விரும்பாத எதுவும்
தேவை இல்லை
உன் நெருக்கமும்
உன் விலகலும் கூட..
*

ஆயுள் முழுமைக்கான
வலியினை விட
ஒரு அந்தி நேரத்தின்
ஒற்றை மகிழ்வு போதும்..
உன் கையிலிருந்து
தவற விழ மாட்டேன்..
இந்த பூமியில்..
என் வானம் நீயான பின்..
*

அள்ளித் தர
முடியாவிட்டாலும்
கிள்ளியாவது கொடு
சிறிதளவு காதலை
*

என் தனிமைக்குள்
அதிகம் வந்து போனது
நீயாகத்தான் இருக்க முடியும்..
என் தனிமை
உன்னால்தானே அளிக்கப்பட்டது
அந்த நள்ளிரவு பேச்சுக்கு பின்..
*

காதல் இரந்து
பெறக் கூடியதில்லைதான்..
காதல் இறந்துவிடக் கூடாதே
*

புத்தி கேட்டு போய்விட்டதாக
சொல்கிறாய்
உண்மைதான்
உன்னைக் காதலிக்கிறேனே.

மீண்டும்


என் வேலைகளை
சரியாக செய்ய வேண்டும்

என் தோழிகளிடம்
சிரித்து பேச வேண்டும்

என் தம்பியோடு
விளையாட வேண்டும்

என் காலைப் பொழுதை
ரசிக்க வேண்டும்..

என்னை மீண்டும்
அழகாக பார்க்க வேண்டும்

என் கவிதைகளை
தொடர்ந்து எழுத வேண்டும்

என் ஆய்வுப் படிப்பை
மேற்கொள்ள வேண்டும்

என் ஆரோக்கியத்தை
தக்க வைக்க வேண்டும்

என் இரவுகளில்
நிம்மதியாய் தூங்க வேண்டும்..

எல்லாவற்றுக்கும்
உன்னை மீண்டும் நான்
அடைய வேண்டும்.

காதலை அடைவது


என் வாழ்நாளில்
ஒன்று குறைகிறது
நீ பேசாத நாளில்..

*
உன்னோடுதான் பேசவில்லை
பேசிக் கொண்டேதான் இருக்கிறேன்
உன்னைபற்றி

*
உன்னோடு பேசாத நாளில் இருந்து
விட்டுவிட்டேன்
தோழிகளிடம் பேசுவதையும்..

*
அவ்வளவு எளிதானது இல்லை
ஒரு காதலை அடைவதும்..
ஒரு காதலை உடைப்பதும்..

*
காதல்
எப்படியோ ஆரம்பிக்கிறது
அப்படியே முடியவும் செய்கிறது..

*
மிக சுலபம்தான் உனக்கு
என்னை அழவைப்பது
மிக கடினம் எனக்கு
உன்னை அழ வைப்பது

காதலின் சுவை


உனக்கு பசிக்க வில்லை
நீ சாப்பிடவில்லை
உன் திடம் தெரிகிறது

எனக்கு பசிக்கிறது
சாப்பிட முடியவில்லை..
என் நிறம் வெளிர்கிறது

காதலுக்கு பசிக்கிறது
நினைவுகளை தின்கிறது
காதலின் சுவை புரிகிறது.

காதல் முடியாது


ஆசை 60 நாளில்
முடியலாம்...
மோகம் 30 நாளில்
முடியலாம்...
என் காதல் முடியாது
என் ஆயுளுக்குப் பின்னும்...

மாரடைப்பு


தாங்கொணாத் துயரத்தில்
எப்போது வேண்டுமானாலும்
உன்னை அச்சுறுத்தும்
மாரடைப்பு வரலாம் எனக்கு

மாற்றிக் கொள்



உன் மறுத்துரைப்பாலும்
என் மாற்றிக் கொள்ளாத்
தன்மையாலும்
அந்நியமாகி நிற்கிறது
நமது அன்யோன்யம்

முடிவற்ற காதல்



காலியாகவோ
காலாவதியாகவோ
செய்யாது என் காதல்

காலத்தைப் போல 
முடிவற்றது 
என் காதல்

மிச்சமிருப்பவை


நீண்ட விவாதத்தில்
நமக்கிடையே
மிச்சமிருப்பவை
என் காதலும்
உன் பிடிவாதமும்

முதல் மொழி


என்னைக் கலைத்த
முதல் மொழி
உன் புன்னகை கலந்த குரல்

பிடிவாதம்



பூமியைவிட சிறியது
உன் பிடிவாதம்
வானத்தைவிட பெரியது
என் பிடிவாதம்
இருவரின்
பிடிவாதமும் சிதறுகிறது
காதலின் பிடிவாதத்திற்கு முன்..

நினைவு


எதைப் பார்த்தாலும்
எதைக் கேட்டாலும்
எதை உணர்ந்தாலும்
நினைவுக்கு வந்துவிடுகிறாய்
நீ மட்டும்...

துளித்துளியாய்


உனக்கு பிடித்ததை நானும்
எனக்கு பிடித்ததை நீயும்
கொண்டு வரச் சொல்கிறோம்
நீ துளி நேரத்தில் முடித்துவிடுகிறாய்
நான் துளித்துளியாய் நீடிக்கிறேன்...

பிடிவாதமாக


ஆண்டாளின் துயரத்தையும்
மீராவின் துயரத்தையும்
ஒட்டுமொத்தமாய்
சுமத்தி செல்கிறாய்
என் மீது
பிடிவாதமாக...

நேசம்


உன் நேசம்
என் இதயத்தில் உறைந்தும்
உன் பிடிவாதம்
என் இதயச் சுவர்களில்
கொழுப்பாகப் படிந்தும் விட்டது
இனி என்ன?

குழந்தை


கையில் மறைத்து வைத்திருக்கும்
இனிப்பைத் தர மறுக்கும்
குழந்தையப் போலதான்
இருக்கிறது
உன் செய்கை
நான் வேண்டியும்
நீ மறைத்துச் செல்லும்
நம் காதல்

வரவேற்பு


என் இரவுகள்
விழித்திருக்கின்றன
உன்னிடமிருந்து
ஒரு வரவேற்பு சொல்லை
எதிர்நோக்கி...

அணுவாய் கொல்லும்


என் சாவிற்காக அரண்டு
ஒத்துக் கொள்ளாதே
என் காதலுக்காக மிரண்டு
ஏற்றுக் கொள்ளாதே
என் சாவை விட
என் காதல்
உன்னை
அணுஅணுவாய் கொல்லும்

மஞ்சள் வெளியில்


நமக்கிடையேயான
இடைவெளி
அதிகமாகும் போது
அதில் உணரப்படும்
காயங்களும்
கண்ணீருமே
மீண்டும்
நம்மை பிணைத்து வைக்கும்
பாசாங்கற்ற மஞ்சள் வெளியில்

தொடரும்


தப்பிச் செல்வதற்கு
போதுமானதாயிருக்கும்
இடைவெளியை
இட்டு நிரப்புகிறேன்
தொடரும் நினைவுகளாலும்
படரும் காதலாலும்

இந்த சில நாட்கள்


சில நாட்களாய்
புன்னகையில்லை
பகிர்வில்லை
குறுஞ்செய்தில்லை
அழைப்பில்லை
இந்த சில நாட்கள்
நாட்களாகவேயில்லை..

திருடு


உலகில் உள்ள
எந்த பொருளும்
திருடக் கூடியதல்ல
எல்லாம் எனக்குள் இருக்கிறது
ஒன்றை மட்டும் திருடுவேன்
நீ தர மறுக்கும் இதயத்தை

சமன்பாடு


வெகுதூரம் போய்விட
எத்தனிக்கும்
உன் எல்லா முயற்சிகளுக்கும்
பின்னால் ஒளிந்திருப்பது
மென்மையான காதலும்
முன்னீடுடைய சமன்பாடுகளும்

நாளை


முன்னர்
எவ்வளவு நெருங்கியிருந்தோமோ
அவ்வளவு விலகியுமிருக்கிறோம்

இன்று
எவ்வளவு ஒதுங்கியிருக்கிறோமோ
நாளை
அவ்வளவு ஒன்றியிருப்போம்

பதப்படுத்தி


உன்னிலிருந்து
உதிர்ந்த
அந்த ஒற்றை வார்த்தையை
குளிர்பதனப்பெட்டியில்
பதப்படுத்தி வைத்திருக்கிறேன்..
பின்னாட்களில்
அவசியம்
பயன்படுத்தக் கூடுமென..

கைகுலுக்கல்


சந்தித்தலின் மகிழ்வையும்
விடைபெறுதலின் நிமித்தத்தையும்
வெளிப்படுத்துகிறது கைகுலுக்கல்..

உன்னை சந்திக்கும் போது
அது முதலாவது சந்திப்பு
எனத் தோன்றாததாலும்
உன்னைப் பிரியும்போது
அது கடைசி சந்திப்பு
என எண்ணாததாலும்
இதுவரை நிகழ்ந்ததில்லை
நமக்கிடையே கைகுலுக்கல்...

மறுதலி


உன்னை நன்கறிவேன்
உன் வார்த்தைகளில்
பொய் விதைத்த போதும்
உன் மௌனத்தால்
மறுதலித்த போதும்
நன்கறிவேன்
அதன் பின்னிருந்து
துடித்துக் கொண்டிருக்கும்
என் மீதான அக்கறையை
கையளிக்காத காதலை...

தற்கொலை


ஒரு பொழுதும்
தற்கொலை தீர்வாவதில்லை
எனச் சொல்லி
வழிந்து திணிக்கிறாய்
தற்கொலைக்கான தூண்டுதலை

வெளித்தள்ளு


உன்னில் சேமித்து வைத்திருக்கும்
காதலில்
ஒரு கவளத்தையாவது
நீ செரித்திருப்பாயெனில்
வெளித்தள்ளு
ஒரு கண்சிமிட்டலிலாவது

உனது நீ


எந்தவித
நிரூபித்தலுக்கும் இடமின்றி
ஒளிந்து கொண்டது
உனது நீ

எல்லாவித
தாக்குதலிலிருந்தும்
தப்பி நிற்கிறது
எனது நான்

உறை ஊற்றி


பால் போன்ற
நேசத்தில்
துளி காதலை
உறை ஊற்றினாய்
முழுவதும் உறைந்துவிட்டது
என் நேசம்..

புனைவு


சாகசமாயும்
சாமர்த்தியமாயும்
நிகழ்த்திவிடுகிறாய்
என் மீதொரு வன்முறையை

பாசாங்கற்று ஏற்றுக்
கொள்வதைத் தவிர
வேறெந்த புனைவுகளையும்
அறிந்திருக்கவில்லை
ஒப்பீடற்ற என் நேசம்

முரண்டு பிடி


இரண்டு முறை
திரும்பிப் பார்த்தாலே
மூன்றாம் முறை எதிர்பார்ப்போம்
இரண்டு வருடம்
விரும்பி பேசிவிட்டு
மூன்றாம் வருடம்
முரண்டு பிடிக்கிறாயே
எவ்வகையில் நியாயம்?

சானை பிடி


கூர்தீட்டப்பட்ட
நமது நேசம்
சில நாட்களாய்
புழங்காமல் கிடக்கிறது
சானை பிடிக்க வேண்டும்
துருப்பிடிக்கத் துவங்கும் முன்

நம்பு


ஏதோ ஒன்றிற்காகவோ
எதற்காகவோ
என் நினைவு
உன்னைத்
தீண்டிக் கொண்டிருந்தால் நம்பு
நமக்கிடையேயிருப்பது காதலென...

சலனமின்றி


சலனமின்றி
இருவராலும்
நாட்களை நகர்த்த முடியுமெனில்
நம்மிடமிருப்பது
காதலில்லை
அதே வேளையில்
நட்புமில்லை

ஈரப்பதம்


சில முயற்சிகளுக்குப் பின்
அலுத்துத் திரும்பும்
என் கனவுகளைத் தேற்றுகிறேன்
விடியும் தூரம் தொலைவில்
இல்லை எனவும்
நம்பிக்கையின் வேர்களில்
ஈரப்பதம் மிச்சமிருக்கிறதெனவும்

சமரசத்தின் புள்ளி


உன்னிடம்
ததும்பும் புன்னகையை
மறக்காமல் எடுத்து வா
எனக்கு
நீ தந்த காயங்களை
உறையிலிட்டு வருகிறேன்
ஏதாவதொரு
சமரசத்தின் புள்ளியில்
சந்தித்தாக வேண்டும் நாம்

காயம்


சன்னலை அடைக்கையில்
நைந்த விரலின் காயம்பற்றி
உனக்குச் சொல்ல
அழைத்தேன்
நீ தூங்கியெழுந்திருப்பாய்
எனும் உத்தேசத்துடன்
அழைப்பு முழுதாய் சென்று
நின்றுவிட்டது
தவறவிட்ட அழைப்பாகவும்
உணர்த்த முயலும் தத்தளிப்பாகவும்

பெருமழை


மிகவும் உக்கிரமான
தகிப்புடன்
இரவுகளை எரிக்கிறது
அந்த கடுஞ்சொல்...

அதற்கு பிறகு
பலமுறை பெருமழை
பெய்த போதும்
கடுஞ்சொல்லின் அடியில்
தேங்கியிருக்கும் கதகதப்பு
மட்டும் குறையவில்லை

பக்கத்து வீட்டுச் சிறுமி


பக்கத்து வீட்டுச் சிறுமி தந்த
ஒற்றைப் பலூனில்
காற்றை நிரப்புகிறேன்
அது உப்புகிறது
பெரிதாக் இன்னும் பெரிதாக

வெடித்துவிடுமென நிறுத்துகிறேன்
அது கையைவிட்டு பறந்து செல்கிறது

அழத்தொடங்கிய சிறுமியும்
பதறிய நானும்
பலூனைப் பார்த்தபடி நிற்க

எங்கிருந்தோ வந்து
சிறுமிக்கு ஒற்றை பலூனையும்
எனக்கு ஒற்றை முத்தத்தையும்
அளித்துப் போனாய்
சிறுமி அழுவதை நிறுத்தியிருந்தாள்
நான் இப்போது அழத் தொடங்கினேன்

துயரம்


நேற்றை மீட்க முடிந்தால்
அல்லது
நாளையைப் பார்க்க முடிந்தால்
இன்றில்
இவ்வளவு துயரம் இருக்காதுதானே

நேற்றைய உன் நெருக்கம்
உணர்ந்திருக்கிறேன்
நாளைய உன் உறவு
நம்பியிருக்கிறேன்
இன்றைய உன் விலகல்
தத்தளிக்கிறேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்


நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு உணவகத்தில்
உன் கண்ணிலிருந்த அன்பைப் பருகினேன்
என்னிலிருந்த தாகத்தை விழுங்கினாய்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு பூங்காவில்
என் கையைப் பற்றிக் கொண்டாய்
உன் கைமுடிகளை எண்ணினேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு கடற்கரையில்
உன் தோள் தொட்டு விளையாடினேன்
என் நெருக்கத்திற்குள் உறைந்தாய்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு பெரிய கடையில்
எனக்குத் தேவையானதை வாங்கித் தந்தாய்
என் புன்னகையிலும் ஸ்பரிசத்திலும் வசீகரித்தேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு பேருந்து நிலையத்தில்
எனக்கு கண்ணீரை பரிசளித்தாய்
உப்பாய் கரைந்து கொண்டிருந்தேன்
பின்னர்
சர்க்கரைப் படிவங்களாகினேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்
தினம் இரவுகளில்
மொய்த்துக் கிடக்கிறாய்
ஒரு இரவு கட்டெறும்பாய்
மறு இரவு சிற்றெறும்பாய்
கரையத் துவங்கியது காதல்
நானிப்போது உன் இரவுகளில்
மழை எறும்பாய்..

மன்னித்துக் கொள்


என் காதுகளை மூடிக் கொள்கிறேன்
மன்னித்துக் கொள்
உன் வார்த்தைகளை
செவிமடுக்கும் நிலையில்
நானில்லை

உன் பிடிவாதத்தை
பிரதிபலிக்கும் சொற்களை
கேட்கத் தயாராக இல்லை

என்னைக் குதூகலப்படுத்திய
உன் குரலே
இன்று குத்திக் கிழிக்கவும்
நேரம் பார்த்து நிற்கிறது

ஸ்பரிசித்த குரலே
பாம்பின் தீண்டலையும்
செய்யுமெனில்?
வேண்டாம்
என் செவியினை பிணைத்துக்கொள்கிறேன்
மன்னித்துக் கொள்.

என் வார்த்தைகள்


எனது நேசத்தை
துச்சமெனக் கருதச் செய்வது
என் உடலெனில் எரித்துவிடுகிறேன்

எனது அக்கறையே
உனக்கு அச்சுறுத்தலாகுமெனில்
நிறுத்திக் கொள்கிறேன்
வெளிகாட்டாமல்

எல்லாவற்றிலும்
முகமூடியைக் கழற்றிவிட்டு
நிர்வாணமாகத்தான் நிற்கிறது
என் வார்த்தைகள்
உன்னைப் போலில்லாமல்

அழிப்பான்


அமைதியிழந்த என் இரவினில்
மீண்டும் மீண்டும்
உள் நுழைந்து அழைக்கிறது
உன் நல்வார்த்தைகள்

கண்ணை மூடி
உறங்க முயற்சிக்கிறேன்
உனது வார்த்தைகள் சூழ்ந்து நிற்கின்றன
உனது குரல் தட்டி எழுப்புகிறது

ஒரு அழிப்பான் கொண்டு
அனைத்தையும் அழித்துவிட முனைந்தால்
என்னால் எழுதமுடியும்
மீண்டும்
உனக்கும் என்க்குமான காதலை

விடுதலை


இந்த உடலைக்
கடந்துவிட்டால்
விடுதலை கிடைத்துவிடும்
அனைத்துத் தளைகளிலிருந்தும்...

மீண்டும்
நானொரு குழந்தையாய் பிறப்பேன்
உனது குடும்ப உறவுகளில் ஒருத்தியாக
உன்னைப் பார்த்தபடியே வளர்ந்திருப்பேன்

உன் மடிமீது ஏறி விளையாடுபவளாக
உன் தலைமுடியைக் கலைப்பவளாக
உன் கன்னத்தில் முத்தமிடுபவளாக

உன் அக்காவின் மகளாகவோ
உன் அத்தையின் மகளாகவோ
மீண்டும் பிறப்பேன்

இப்போது கடந்துவிடுகிறேன்
நீ விரும்பாத இந்த உடலை மட்டும்
என் ஆன்மாவை
உனக்கு பாதுகாப்பாய் விட்டு...

எங்கள் கிராமத்தின் இரவு



இரவு வந்துவிட்டால் 
கிண்ணத்தில் சோற்றை பிசைந்து கொண்டு 
முற்றத்தின் கட்டிலுக்கு வந்துவிடுவாள் சித்தி... 
எனக்கும் தம்பிக்கும் 
சோறு ஊட்டும்  முயற்சியில் 
அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கேற்ப 
எங்கள் வாய் திறந்து உள் வாங்குவோம் 
அவள் கதைகளையும் சோற்றையும்.. 
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 
ஒவ்வொரு கதை சொல்வாள்.. 
இன்றும் அதே நட்சத்திரங்கள் உள்ளன..
இன்றும் கதை சொல்கிறாள் 
அவள் கிராமத்தில் இருந்தபடி 
இருக்கிறது நகரத்திலும் நட்சத்திரம் பார்க்க 
எனக்கொரு மொட்டைமாடி.. 

விமானத்தின் மீதான அதி ஆர்வம்.


வீடு போல இருக்கும் 
ஒரு பெரிய அறை போல இருக்கும் 
பேருந்தைப் போலத்தான் இருக்கும் 
இப்படியான பலவேறு கருத்துகள் 
எப்போதாவது 
எங்கள் கிராமத்து வானில் 
பறந்து செல்லும் விமானம் பற்றியோ 
வானில் தெரியும் புகைப் பாதை பார்த்தோ 
சொல்வதுண்டு..

வெளிநாட்டுக்கு சென்று வந்திருப்பவர்கள் 
வீட்டில் விடிய விடிய கதை கேட்டு 
விமானம் இப்படித்தான் இருக்கும் 
எனும் கற்பனை எகிறிப் போவதுண்டு.. 
சிலருக்கு விமானத்தில் பொய் வந்ததைப் போல 
உணர்வு வருவதுண்டு.. 

இன்னும் தீர்ந்துவிடவில்லைதான்.. 
கிராமத்து வானில் எப்போதாவது பறக்கும் 
விமானத்தின் மீதான அதி ஆர்வம்..

கவிஞராய் இருப்பது ஒரு சாபமே.


தாத்தாவுக்கு 
காதல் கவிதைகள் எழுதினால் பிடிப்பதில்லை..
தம்பிக்கு கவிதைகளே பிடிப்பதில்லை.. 
தங்கைக்கு எப்போதாவது பிடிக்கும் 
அப்பாவுக்கு எப்போதுமே பிடிப்பதில்லை
அம்மாவுக்கு எழுத்தைப் பற்றி 
எந்த கருத்தும் இல்லை..
இப்படியான நிலையில் 
கவிஞராய் இருப்பது ஒரு சாபமே.. 

இருட்டில்


இருட்டில் 
சமயலறையில் இருந்து 
படுக்கையறை வரை 
தடவிச் சென்றுவிடுவேன்.. 
எங்கு என்ன பொருட்கள் இருக்கின்றன 
என்று கண்டுபிடித்துவிடுவேன்.. 
என்று சொன்னேன்.. 
நானும் கண்டுபிடிக்கிறேன்.. 
அங்கேயே உட்கார்ந்திரு என்று
வாசலுக்குச் சென்று திரும்பி நின்று 
கண்ணை மூடி 
கையை நீட்டி வந்தாள்
அந்த இடத்தை விட்டு 
அசையவில்லை நான்..

எனது முதல் இரவு


எனது முதல் இரவைப் பற்றி 
நிச்சயமாய் எனக்கு தெரியாது ..
அவளின் அணைப்பிற்குள் இருந்திருக்கலாம்.. 
அவளைத் தூங்கவிடாமல் செய்திருக்கலாம்.. 
அவள் என் முதல் வாசம் அறிந்திருக்கலாம்.. 
அவள் தன் கனவுகளை என்னிடம் சொல்லியிருக்கலாம்.. 
ஆனால் நிச்சயமாய் தெரியவில்லை..
இதுதான் நடந்தது என்று.. 
சொல்வதற்கு அவளும் 
இப்போது உயிரோடு இல்லை.. 
அதனால் நிச்சயமாய் எனக்கு தெரியாது..
நான் பூமிக்கு வந்த முதல் இரவு பற்றி.. 

வெப்பமயமாதல்


வெப்பமயமாதல் பற்றி 
அடிக்கடி கனவு வருகிறது..
தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கத்திற்காக
வேரோடு அறுத்தெறியப்பட்ட 
ஆண்டுகள் பலவான மரங்களைக் 
கடந்து சென்ற பயணத்திற்குப்பின் ...

கனவிலிருந்து தப்பிக்கும் 
உபாயம் ஏதும் தெரியாத போது 
நான் சாப்பிட்டு தூக்கியெறிந்த 
மாமரத்தின் கொட்டை
கொள்ளையின் ஈரப்பதம் உள்வாங்கி 
முளை விட்டிருந்தது.. 
அன்று முதல் நீரூற்றி வளர்க்க 
ஆரம்பித்தேன்..
அதற்கடுத்த நாளிலிருந்து 
அந்த கனவு வருவர்து 
நின்றுவிட்டது.. 

Sunday, January 23, 2011

நினைவு

இனி இழப்பதற்கு 
ஏதுமில்லையென்ற 
மெத்தனத்துடன் 
மொத்தமாய் 
வெளியேறுகிறேன்..  
இப்போதுதான் யோசிக்கிறேன்..
உன் நினைவுகளை 
எங்கே விட்டுச் செல்வது? 

அச்சம்

அச்சம் தரக்கூடியதென 
தூரத்தில் இருந்து பார்க்கிறாய் 
என் பிரியத்தை 
மெல்ல ஊர்ந்து 
உன்னருகே நெருங்கிவர 
உற்றுப் பார்க்கிறாய் 
அதன் மெதுமெதுப்பை
ஸ்பரிசிக்கிறாய்..
கையில் தூக்கிவைத்து 
விளையாடுகிறாய்..
யாரோ உன்னை அழைக்க 
பதற்றத்தில் நழுவ 
காயங்களுடன் விட்டுவிட்டு 
வீட்டிற்குள் ஓடுகிறாய்.. 
பிறகு 
ஜன்னல் வழியாய் 
பார்த்துக் கொண்டிருந்தாய் 
வெகுநேரம் அதன் துடிப்பை.. 

படியேறி

வாசலில் 
இறக்கிவிட்டு வரும் 
உன் நினைவுகள் 
படியேறி மூன்றாம் மாடி 
வருகிறது.. 
கதவைத் தாளிட்டபின்னும்.. 

சிறு குறிப்பு

சிறு சிறு குறிப்புகளாய்
சேகரித்து வைத்திருக்கிறேன்
நமது சந்திப்புகளை..
இன்னும் சேகரிப்பேன்..
என் கடைசிச் சொட்டு போதை 
தீரும்வரை..
என் முதல் மோகம் 
முற்றுப் பெறும் வரை..

யாராவது

அச்சமாகத்தான் இருக்கிறது..
யாராலும் கவனிக்கபாடாத நேரத்திலும் 
யாராவது ஒருவரால் 
கவனிக்கப்படும்போதும்   
யாரும் பேசாத கணத்திலும்  
யாராவது பேசும்போதிலும் 
இந்த கவிதையை 
யாரும் படிக்காத தருணத்திலும் 
யாராவது படிக்கும் போதிலும்.. 

நிகழ்ச்சிநிரல்

நக்கான நிகழ்ச்சிநிரல் 
முன்னரே தெரிந்திருந்தது 
அழைப்பிதழ் பார்க்காமலே.. 

நீயும் நானும்
ஒரு மாலையில் சந்திப்போம்..
கண்டதெல்லாம் பேசுவோம் 
இரவுகளில் சிலாகிப்போம்..
கவிதைகள் எழுதுவோம்... 
கருத்துகள் பகிர்வோம்.. 
காதல் பற்றி முனகுவோம்.. 
குடும்பத்தை சிந்திப்போம்.. 
இப்படி எல்லாம் சரியாக 
நானறிந்த 
நிகழ்ச்சிநிரலின் படியே நடந்தது..
நான் எதிர்பார்க்காத ஒன்று 
நன்றியுரை சொல்லி 
நீ முடிப்பாய் என்பதையே..

எழுத்து

உள்ளுக்குள் 
எழுத்துக் கூட்டி 
வார்த்தைகள் சொல்லும் முன் 
புரிந்துவிடுகிறது உனக்கு.. 
அதன் சாராம்சம்.. 

அனிச்சை

அவனிடமிருந்து 
அனிச்சையாய் வெளியான 
சொற்களை 
சேமித்து வைக்க ஆரம்பித்தேன்..
அவன் சொற்களைத் தொலைத்த 
நாளொன்றில் 
அவனிடமே திருப்பித் தந்தேன்..
அவன் மறுதலித்து நின்றான் 
நானும் அந்த ஒற்றையடிப் 
பாதையில் விட்டுவிட்டு 
திரும்பி நடந்தேன். 
அன்றைய இரவில் என் படுக்கை 
முழுவதும் அந்த சொற்கள் 
ஊர்ந்து நெளிந்தன.. 
அதன் பின்னால் அவனும்..

சொற்கள்


யாரோ தூவிச் 
செல்லும் சொற்கள் 
என் மீதும் ஒட்டிக் கொள்கின்றன..

தூசு ஒட்டியதைப் போல 
தட்டி விடவோ 
துடைத்து எறியவோ முடிவதில்லை 
திரவத்தைப் போல 
கழுவிடவும் கூடவில்லை..
காற்றென 
மூக்கைப்பொத்தி நகரவும் வாய்ப்பில்லை.. 

என்னை அரித்துத் தின்னும் 
சொற்களை கூறு போடும் 
வழியொன்றும் புலப்படவில்லை..

ஒன்று மட்டும் தோன்றியது 
என் சொற்களும் இப்படித்தான் 
யார் மீதேனும் ஒட்டி 
பாடாய் படுத்தக் கூடும்..
இனி வெளியே தூவுவதில்லை
என் கனமான சொற்களை

சுவாசத்தை போல

என்னிடம் சொல்வதற்கு 
ஒன்றுமில்லாமல் போகலாம்.. 
பிறர் சொல்வதை கேட்க
ஆர்வமில்லாமலும் போகலாம்.. 
நாளைக்கென சொற்களை 
சேமித்து வைக்க முடியாது..
அது அந்தந்த கணங்களில் நிகழ்வது
சுவாசத்தை போல.

Friday, January 21, 2011

அமைதியுறும் வரை - 6

15
அந்த உணவகத்தில் 
என் கனவுகள் பற்றி கேட்டபோதே 
உன் கைகளைப் பற்றிக் கொண்டு 
ஏறிட்டேன் 
சிறு புன்னகை செய்தாய்.. 

பின் தொடர்ந்தேன் 
உன் வீடு வந்ததும் 
ஒவ்வொருவிரலாய் 
விடுவித்தாய் 
என் அனுமதியின்றியே 

என் கண்களில் துளிர்க்கும் 
கண்ணீர்த்துளி 
உருண்டு தரை தொடவும் 
நீயுன் கதவைத் தாளிடவும்
சியாக இருந்தது 
இரண்டின் அதிர்வும் 
===================
16
கோழையென சாகத்துணிய மாட்டேன் 
என் காதல் 
புறமுதுகிடாது.. 
வீரங்கொண்டு சாகடிக்கவும் மாட்டேன் 
என் காதல் 
கொலை நிகழ்த்தாது.. 
இரண்டுமாயும் இருக்கும் 
இரண்டுமற்றும் இயங்கும்.. 
=====================
17
எழுதுவேன் 
தொடர்ந்து எழுதுவேன்..
உன் மனம் சலனமுறும்  வரை.. 
என மனம் அமைதியுறும் வரை..
==============================
18
என் செவியினுள் 
பல உணர்ச்சிகளின் 
கதுப்புகளை 
உருவாக்குகிறது 
உன் குரல்.. 

ஒரு சமயம் மென்மையாகவும் 
ஒரு சமயம் வன்மமாகவும் 
ஊடுருவுகிறது அது..

ஒரு இரவு தகிப்பதும் தத்தளிப்பதுமாக 
மறு இரவு தாலாட்டுவதும் தலைகோதுவதுமாக
மாறுகிறதுன் குரல்.. 
===================
19
அமைதியிழந்த என் இரவுகளை 
ஆற்றுபடுத்தும் வழி 
நீ மட்டுமே அறிந்தது.. 
ஆதலால் வந்துவிடு அன்பே 
என் இரவுகளை உயிர்ப்பிக்க...
===========================
20
உன்னிடம் 
என் தோல்வியை 
ஒப்புக் கொள்கிறேன் 
என்னால்
உன்னை மறக்க முடியவில்லை 
முழந்தாளிட்டழும்
காதலைத் 
தோள் தொட்டு தூக்கி நிறுத்து 
===========================
21
நீ உருவாக்கிய 
சமன்பாடுகளை 
நீயேதான் தகர்க்கக் கூடும் 

என் காதலின் பெருக்கையும் 
அதில் என் நொடிகள் கழிவதையும் 
என் துயரம் கூடுவதையும் 
என் நாட்கள் வகுக்கப்படுவதையும் 
நீயறிவாய் அன்பே 

நீ உள்ளிருத்தியிருக்கும் 
சமன்பாடுகளை அழித்துவிட்டு 
உருவாக்கு 
புதிய சமன்பாடுகளை 
என் வாழ்தலுக்கேனும்.. 

===================

சில நொடிகள் - 14


1
உன் காதலிலிருந்து 
மரணத்தைக் கண்டேன்.. 

என் மரணத்திலிருந்து 
காதலைக் காண்பாய்.. 
===================
2
இந்த நகரத்திற்கு 
யாரை நம்பியும் 
வரவில்லைதான் 
உன் வார்த்தைகளில் 
சொல்வதானால் 
என்னை மட்டுமே 
நம்பி நானிருக்கிறேன். 

ஆம் 
உன்னைச் சந்திப்பதற்கு 
முன்பு வரை 
எனக்காகவே நானிருந்தேன். 
என்னிலே நானிருந்தேன்.. 
========================
3
ஊசியால் குத்தி 
அழுத்திப் பார்க்கிறாய் 
இரத்தம் பெருகுகிறது 
சிந்திய சிவப்புத் துளிகளில் 
காயத்துவங்கியது 
உன் வார்த்தைகளின் தடயமும்..
==============================
4
அமைதியுறுகிறது 
என் மனம் 
இந்த நள்ளிரவில்.. 
விடியலுக்கு இன்னும் சிலமணிநேரமே 
என்றல்ல.. 

நீயும் இந்நேரம் 
என்னைப்பற்றிய 
சிந்தனையுடன் 
விழித்திருக்கிறாயென..
=======================
5
மறந்துவிடுவேன் என 
பேச மறுக்கிறாய் 
மூடன் நீ 
மறப்பது உன் சாயல்..
நினைப்பது என் சுயம்..
======================
6
இன்னும் சில நாட்களில் 
அறியத் தருவேன் உனக்கு 
உயிர்த்திருத்தலின் வலி பற்றி.. 
=============================
7
அன்பை வார்த்தைகளில் 
சொல்வதை விட 
மிக இலகுவான செயல் எதுவுமில்லை..

அன்பை எழுத்துக்களில் 
பதிய வைப்பதை போல 
மிக துயரமான கவிதை எதுவுமில்லை..

அன்பை புரிந்து கொள்ள 
மறுப்பது போல 
மிக மோசமான வலி எதுவுமில்லை..

அன்பை தயவு தாட்சண்யமின்றி 
மறுதலிப்பது போல 
ஒரு பெருஞ்சோகம் எதுவுமில்லை.. 

அன்பை அது எவ்வளவு ஆழமாயினும் 
புறக்கணிப்பது போல 
மிகக் கொடிய வேதனை வேறெதுவுமில்லை.. 
====================
8
இனி யாரையும் 
எப்போதும் 
என்னால் காதலிக்க இயலாது 

யாரும் ஒரு துளி காதலை கூட 
என்னில் ஊற்றவும் முடியாது 

என் கோப்பை 
நிரம்பியிருக்கிறது 
உன் மீதான காதலால்.. 
=================
9
என் விளிம்பிலும் 
என் அடியிலும் 
துள்ளி எழும்பி சிதறி 
உறைந்து போகிறது
உன் வார்த்தை துகள்கள்.. 
=================
10
ஒவ்வொரு இரவிலும் புகுந்து 
மாற்றியது உன் குரல் 
மாறியது என் மனம் 
அதிலிருந்து 
வழிந்துருகும் காதல் 
மாறக்கூடியதோ 
மாற்றக் கூடியதோ அல்ல.. 
ஒரே இரவிலும் 
இனிவரும் இரவிலும்.. 
=================
11
என் விதியை நிர்ணயிக்கிற 
ஆயுதத்தை
காலம் 
உன்னிடம் தந்திருக்கிறது 

நீ எதுவும் செய்யலாம்
ஆயுதத்தால் 
தாக்கவோ 
காக்கவோ.. 
===========
12
முதல் நபரான நீயும் 
மூன்றாம் நபரான வேறாரும்
சொல்வது எதுவாயினும் 
என் இருத்தலுக்கு 
சாதகமாக இல்லாத பட்சத்தில் 
தகர்த்தெறிந்து 
காத்திருப்பேன் 
இரண்டாம் நபரான 
என் அதிவிருப்பம் 
நிறைவேறுவதற்கான 
காலத்தை நோக்கி 
இப்பெருங்களத்தில்..
===================
13
எனக்காக காத்திருத்தாய் 
சில நொடிகள் 
உனக்காக காத்திருக்கிறேன் 
நொடிநொடியாய்..

எனக்காக விழித்திருந்தாய் 
சில இரவுகள் 
உனக்காக விழித்திருக்கிறேன் 
ஒவ்வொரு இரவும் 

எனக்காக வாழத் துணியவில்லை 
இன்னும் நீ 
உனக்காக வாழ்ந்திருக்கிறேன் 
மரணத்தின் நெடியிலும் 
======================
14
கட்டுப்பாடுகளுக்குள் 
சிக்கித் திணறுகிறாய் 
அதன் இடிபாடுகளில் 
நொறுங்குகிறது 
என் சுவாசமும்.. 

தகர்த்தெறிகிற வழிபற்றி 
முனகலோடு சொல்கிறேன் பலமுறை 
உன் குரலுயர்த்தி 
என்னை நகரச் சொல்கிறாய்..

இயக்கமற்று மயக்கமுறுகிறது 
என் தேகமும் மோகமும்.. 
========================

கண்ணீராய்

என் கண்ணீரைத் துடைக்க வந்தவன் 
நீயென பூரித்துப் போயிருந்தேன்..
நீயே என் கண்ணீராய் மாறுவாய் 
என அறியாமல்.. 

*
என் காதலின் எல்லை
திருமணத்தில் இல்லை 
நமக்கான வாழ்தலில் இருக்கிறது 

விதை - 3

உனக்கென 
விதைக்கிற என் சொற்களை 
காற்றுப் புகாத 
ஒரு பெட்டியிலிட்டு
சேகரித்து வைக்கிறேன்..
எங்கிருந்தோ ஒரு 
மேய்ப்பர் 
காவலுக்கிருக்கிறார்
நீ பெற்றுச் செல்லும் வரை.. 
விதைநெல்லுக்கும்
விதைக்கும் எனக்கும் 

*
எனக்கு
ஒரு மரணத்தையும் 
ஒரு பிறப்பையும் 
நிகழ்த்திவிடக் கூடிய 
வாய்ப்பு ஒன்றிருக்கிறது 
உன் கைகளில்.. 

*

உனது சொற்களின் 
மறைப்பிற்கு பின்னும் 
காத்திருக்கிறேன்.. 
உன் அறிதலுக்கான 
வாய்ப்பொன்றை உருவாக்கி.. 


கண்ணீராய்

என் கண்ணீரைத் துடைக்க வந்தவன் 
நீயென பூரித்துப் போயிருந்தேன்..
நீயே என் கண்ணீராய் மாறுவாய் 
என அறியாமல்.. 

*
என் காதலின் எல்லை 
திருமணத்தில் இல்லை 
நமக்கான வாழ்தலில் இருக்கிறது 

மீண்டும் மீண்டும்..

இன்றும் 
துவங்கியது எனக்கான விடியல்.. 
இன்றிரவும் நிகழ்த்துவாய் 
முற்றுப் பெறுவதற்கான 
ஒரு உரையாடலை..
இன்றும் 
அணிந்து கொள்கிறேன் 
எதிர்கொள்வதற்கான கவசத்தையும் 
நாளையை நீட்டிப்பதற்கான 
சில கவிதைகளையும்.. 

*
உரையாடல்கள்
பரிமாற்றங்கள் 
விசாரிப்புகள் அனைத்தும் 
குறுகிப் போயிற்று..
பெருகி சூழ்கிறது 
அத்தனை அடக்குதளையும் 
மீறிய நேச நினைவுகள்.. 

*
என் இருத்தலின் சாத்தியம் 
குறித்து என்னைவிட 
அதிகம் கவலைப்படுகிறாய் 
அல்லது 
அவ்வாறாகக் காட்டிக்கொள்கிறாய் 

என் மரணத்திற்குப் பின்னும்.. 
எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் 
நிகழ்த்துவேன்.. 
நமக்கிடையே நிகழ்ந்த 
நேசத்தின் கனபரிமாணங்களை 
மீண்டும் மீண்டும்.. 

சாரமாரியாய்

நெஞ்சாங்குலை 
நடுங்கிக்கிடக்கிறது 
நேற்றிரவு 
நீ சாரமாரியாய் 
அள்ளிஎறிந்த சொற்கள்.. 

*

என் மூளைச் செல்களை 
தின்று கொழுக்கிறது..
உன் பிடிவாதமும்.. 
பிதற்றல்களும்.. 

எதிர்நோக்கி - 7

என் ஆழ்துயர் 
குறித்துச் சிந்திக்குமுனக்கு 
எந்த வருத்தமும் இல்லை..
நீயே துயரத்திற்கான 
மூலமானதைப் பற்றி.. 

*

சாத்தியமற்றவையென
ஏதுமில்லை 
சாத்தியங்களை 
சந்திக்க துணிவிருந்தால் 
சாத்தியமற்றவையும் 
சாத்தியமே.. 


*

நான் விரும்பாத வார்த்தைகளை 
நீ சொல்லும் போது 
உள்ளுக்குள் உடைபடுகின்றன 
என் கனவுப் பாதைகளும் 
என் எதிர்பார்ப்புகளும்.. 
இருந்தும் மீண்டெழுந்து 
வருகிறேன் 
நீ விதைத்த நம்பிக்கையினூடே.

*

நமக்கிடையேயான 
நிறபேதம் 
இனபேதம் 
மத பேதம் 
யாவையும் கடந்து 
நேசத்தின் பாதையில் 
ஒன்றிணைந்தோம்.. 
சேரும் வேளையில் 
பார்க்கிறாய்..
காதலில் பேதத்தை..

*

என்னைத் தவிர 
யாரும் உணரக் கூடியதில்லை 
உன்னுடைய மறைப்பும் 
உன்னுடைய மறுப்பும்

*

உனக்கு உறுத்தல் 
எதுவும் இருக்கப் போவதில்லை
நீ எந்த உறுதியும் தந்ததில்லை 
என்பதால்..
எனக்கும் கூட 
எந்த உறுத்தலுமில்லை
நான் எனக்கான உறுதியுடன் இருப்பதால்.. 

*

எந்த சலனமுமின்றி 
நிகழ்த்த முடிகிறது 
என் மீது ஒரு வன்முறையை 
நடந்ததைப்  பற்றி.. 

எந்த சலனமுமில்லாமல் 
கேட்டு வருகிறேன்.. 
உன் மீதொரு நிகழ்த்துதலுக்கான
நாளொன்றை எதிர்நோக்கி..    

மண்

உன்னை நினைத்துக் கொண்டே 
இம்மண்ணை விட்டு போகிறேன்..
நீ நினைத்துக் கொண்டிருப்பதால் 
மீண்டும் மண்ணுக்கே திரும்பினேன்.. 

மகுடி

ஒரு சீற்றத்திற்கு 
தயாராகிறது 
அடக்கப்பட்ட குரல் 

ஒரு தீண்டலுக்கு 
தயாராகிறது 
பிளவுபட்ட நாக்கு 

ஒரு வேட்டைக்கு 
தயாராகிறது 
பசியுற்ற வயிறு 

முன்னே வந்து நிற்கிறாய் 
மகுடி ஊதியபடி.. 
சுருண்டு படுக்கிறது 
என் நேசம்.

நான் நானாக..

செல்லப் பெயர் வைத்துக் 
கூப்பிடுகிறாய்   
கொஞ்சும் வேளைகளில்.. 

பெயர் சொல்லி 
அழைக்கிறாய்
கோபமான வேளைகளில்.. 

இரண்டின் போதும் 
இருப்பதில்லை 
நான் நானாக.. 
============

எல்லோருக்கும் 
சொல்லியாகிவிட்டது 
உன்னைத் தவிர.. 
நெருப்பினால் சுற்றப்பட்டிருக்கும் 
என் நேசத்தை

சொல்லை பந்தாடி


நகர்கிறது 
வாகன நெரிசலடங்கிய 
நூறடி பாதையிலும் 
போக்குவரத்தற்ற 
கிராமத்தின் சாலைகளிலும்...

புன்னகைக்கிறது
விதைக்கும் போதே 
பேரம் பேசும் 
பெரு வணிகத்திலும்
விளைந்த பின்னும் 
பேரமின்றி 
கொடுத்துச் செல்லும் 
சிறு வணிகத்திலும் 

அழுகிறது 
ஆயிரம் பேர் 
கூடியிருக்கும் கூட்டத்தின் மத்தியிலும் 
யாருமற்ற இரவின் தனிமையிலும் 

விளையாடுகிறது 
ஒரு சொல்லை பந்தாடி 
சுக்குநூறாக்கியும்..
ஒரு கனவை உருவாக்கி 
தகர்த்தும்..

அமைதியாகிறது 
தேற்ற யாருமில்லாத போதிலும் 
தோற்ற வேதனையின் மிச்சத்திலும்.. 

சுழன்றாடுகிறது 
வென்றுவிடுவதெனும் தீர்மானத்துடனும் 
கட்டுக்கடங்காத வேகத்துடனும்.. 

எல்ல்லாம் வாய்த்திருக்கிறது 
நீ நினைப்பதற்கும் 
நான் நிகழ்த்துவதற்கும் 
மத்தியில்.. 

யுத்தம்.

ஆரம்பித்து விட்டது 
மீண்டும்
உனக்கும் எனக்குமான யுத்தம்..

வெல்லப் போவது 
யாராக இருப்பினும் 
தோற்றவரை 
உடன் அழைத்துச் செல்ல 
வேண்டும் என்பது மட்டுமே 
ஒப்பந்தம்..

கவிதையும், காதலும்

வார்த்தைகள் விளையாடினால் 
கவிதை..
உணர்வுகள் விளையாடினால் 
காதல்..
கவிதையும், காதலும் 
விளையாட்டல்ல.. 
=======

எங்கு தொடங்கினாலும் 
உன்னில் முடித்துவிடுகிறேன்.. 
எங்கு முடித்தாலும் 
உன்னில் தொடங்கிவிடுகிறேன்..
என் தொடக்கமும் முடிவும் நீ..
========

எனது வார்த்தைகளை நிறுத்தும் 
புள்ளியும் 
எனது செயலை முடக்கும் 
வாதமும் 
உனது புன்னகை பேச்சில்.. 
========

மடைமாற்ற?

பொங்கி பிரவாகமெடுத்தொடும் 
என் நேசத்தை 
உன்னிலிருந்து 
எங்கே எப்படி மடைமாற்ற? 

விளையாடு

எனது வார்த்தைகளோடு 
விளையாடுகிறாய்..
கவிதை கருக்கொண்டது.. 
எனது உணர்வுகளோடு 
விளையாடுகிறாய் 
காதல் உருக்கொண்டது..
இரண்டும் தொடர வேண்டும் 
என் ஆயுளுக்கும்.. 
இதை எடுத்துக் கொள்ளாதே
விளையாட்டாய்.. 

உதிர்ந்த சிறகு


காயமேற்படும் 
என்றறிந்தும் கொத்திச் செல்கிறாய்..
என் சிறகில்லா உடலில்... 
வழியும் இரத்தத்தையும் 
உன்னையும் மாறி மாறி 
பார்த்து அழுகிறது 
உதிர்ந்த சிறகு.. 

பெருங்கனவின் கோப்பை

என் பெருங்கனவின் 
கோப்பையில் 
நீ ஊற்றுகிறாய் 
உன் வார்த்தைகளை 
ஒரு அமிலமென.. 
உள்ளே இருக்கும் 
காரத்துடன் சேர்ந்து 
அது சமநிலையாகிறது.. 

*

செயலிழந்து வருகிறது 
உனது நிலைப்பாடு.. 
வடிவம் பெறுகிறது 
எனது நிலைப்பாடு..
உன் நிலையும் 
என் பாடும் 
சொல்லி மாளாது 
இருவரின் முதுமையிலும்.. 

*

என்னை அழ வைத்து 
வேடிக்கை பார்க்க 
விருப்பப்படும் 
உன் அறிவுக்கு 
தெரிவதில்லை...
உள்ளுக்குள் அழுதழுது 
மரத்துப் போயிருக்குமென் உணர்வு.

அவகாசம் - 2


தோல்வியை புறக்கணித்தால் 
வெற்றியும் ஓடிவிடும்.. 
நேசிப்பதை நிறுத்தும் போது 
வெறுப்பதும் நின்று விடும்.. 

*
ஆயிரமாய் 
சண்டைகள் வந்த போதும் 
அவ்வப்போது 
சந்தோஷங்கள் வரும் போதும் 
நீட்டிக்கப்படுகிறது.. 
இன்னும் 
நேசிப்பிற்கான அவகாசம்..


மௌனங்கள்

ஆண்டன் செகாவின் 
செர்ரிப் பழத்தோட்டத்தில் 
முப்பத்தைந்து மௌனங்கள் 
இருக்கின்றன.. 
உனக்கும் எனக்குமிடையில் 
இருக்கும் நேசத்தோட்டமோ
மௌனத்தாலானது..

*

காதலிக்கிறவர்கள் எல்லாரும் 
கவிதை எழுதுபவர்கள் அல்ல..
கவிதைகள் எழுதுபவர்கள் 
எல்லாரும் காதலிப்பவர்கள்..

குறுஞ்செய்திகள்.

எப்போது திரும்புவாய் எனும் 
உத்தேசமின்றி 
காத்திருக்கச் சொல்கிறாய்..
நீ வரும்வரை தன்னை படிக்கச் சொல்கிறது 
உன் முந்தைய குறுஞ்செய்திகள்..

*

கொட்டித் தீர்ப்பதற்கான 
சந்தர்ப்பத்தை நோக்கி 
ஊறுகிறேன் எறும்பென.. 
உன் வார்த்தைகளின் மீது.. 
தட்டி விட்டு செல்கிறாய்..
ஒவ்வொருமுறையும்
பிறிதொரு வார்த்தையால்

கனவு - 3

விளையாட்டுக்குகூட 
விலகுவதாக சொன்னாலும் 
விலகி விடும் 
உயிருக்கும் உடலுக்குமான 
தொடர்பு.. 

*

"ஏதேனும் வேண்டுதல்
இருக்கிறதா " என்கிறாய்.
என் வேண்டுதல் யாவும் 
உன்னிடம்தான் என அறியாதவனா?  

*

"காதலைச் சொல்லிவிட்டாய் 
உன் கனவுகளை சொல்" என்கிறாய்.. 
என் கனவே உன் காதலால் 
என்னை நிறைக்க வேண்டும் என்பதுதானே.. 

பூச்சி

பற்களை பூச்சி 
அரிப்பது போல் 
உன் சொற்கள் 
என் இதயத்தை அரிக்கின்றன.. 
பற்களை பிடுங்கி 
எடுத்து விட  முடியும்.. 
இதயத்தை? 

உண்டிவில்

தாவிதீன் உண்டிவில் கல்லாய் 
உன்னைத் தாக்க
என்னிடம் சக்தியுண்டு..
ஆனபோதும் அமைதி காக்கிறேன்.. 
எனக்கெதிராக 
முகமூடி தரித்திருக்கும்  
நீ உண்மையான கோலியாத் அல்ல.

மருந்து

நீ உன் அம்மாவுக்கு 
மருந்து வாங்கும் போது 
எனக்கு ஒரு இனிப்புமிட்டாயும் 
வாங்கி தந்தாய்..
ஒருவருடமாகியும் 
உண்ணவில்லை..
எனக்கு நீ கொடுத்த 
உருவமான ஒன்று 
அது என்பதால்.

என் சாபத்திற்கு பின்

நானில்லாத இந்த பெரும் உலகம் 
இப்போது போலவே இருக்கும்
உன் வாழ்க்கை பயணத்தினூடே..
நீயில்லாத இந்த சிறு உலகம் 
இனி எப்போதும் இருக்காது 
என் சாபத்திற்கு பின்

வாழ்க்கை

வாழ்க்கை முரண்களால் ஆனது..
உன் காதலற்ற நட்பையும் 
என் நட்பான காதலையும் போல..

மழை

நெருப்பு 
தன்னை நெருங்கும் அனைத்தையும் 
எரித்து திமிறி நிற்கும்.. 
என் நெருப்பை 
அணைக்க வந்த மழை நீ

கூட்டுக் கண்

தன் கூட்டுக் கண்களால் 
ஒரு சேர பார்க்கிறது... 
காதல் 
உன் மௌனத்தையும் 
என் வலியையும்..

செரி

ஆரம்ப காலத்தைவிட ..
போகப் போக எழுதும் 
கவிதைகள் தான் பேசப்படும்..
ஆரம்பத்தில் இருந்த காதலை விட
இருக்க இருக்க என் காதல் 
எதிர்ப்படும் யாவற்றையும் 
செரித்து முன்னேறுகிறது 
ஒளியைவிட கூடுதலான வேகத்தில்.. 

பிரிவதில்லை

எந்த இரண்டு நாட்களும் 
ஒன்றுபோல் இருப்பதில்லை..
ஒருநாள் என் அதீத நேசத்தையும் .. 
மறுநாள் உன் பிடிவாதத்தையும் போல 
இருப்பினும் நாட்கள் ஒன்றை விட்டு 
ஒன்று பிரிவதில்லை..
நம்மைப் போல்.

பூமியைப்போல

வானத்தின் காட்சிகளையும்
கடலின் தன்மைகளையும் போல 
மாறிக் கொண்டிருக்கின்றன 
உனது புறக்கணிப்பிற்கான  காரணங்கள்.. 
என் நேசத்த்தின் தன்மைகளை 
மாற்றிக் கொள்ள முடிவதில்லை.. 
பூமியைப்போல...

அன்பே.

ஆயிரம் உறவுகளும்
நட்புகளும் 
என்னை நேசிப்பதில் 
பெருமையில்லை
அன்பே..
நீ என்னை நேசிக்காமல்.. 

உனது கடவுள்

உனது கடவுள் 
" நீ என்ன விரும்புகிறாயோ அதையே 
பிறருக்கு கொடு " என்றார்.
கொடுத்துவருகிறேன்.. 
என்னுள் தேக்கி வைத்திருக்கும் 
மொத்த காதலையும்...
நீ ஏற்றுக்கொள்ளாத போதும்.. 

கள்ளிப்பால்

கள்ளிப்பால் கொடுத்துக் 
கொள்ளச் சொல்லி 
என் கையில் கொடுத்தாய் 
நம் காதலை.. 
அழுது விட்டு 
திரும்பி பார்த்தேன் 
வளர்த்திருந்தது 
வானளாவ,...

உச்சம்..

காதல் 
அஹிம்சையின் மிச்சம்..
வன்முறையின் உச்சம்.. 

பாவம்

காதலில் போராடலாம் 
காதலுக்காக போராடலாம் 
காதலிக்கவே போராட்டமெனில் 
பாவம் தான் காதல்.. 

உண்மை

உன் புன்னகையில் தெரிகிறது
வெள்ளை பொய்கள்.. 
என் கண்ணீரில் தெறிக்கிறது 
கருப்பு உண்மைகள்..
========

மறுப்பதும் மறுதலிப்பதும் பொய்.. 
ஏற்பதும் ஏமாறுவதும் உண்மை 

========

பேசாமலிருந்தும் வளரும்.. 
பேசுகிறபோது உளறும்..
இந்த காதல் விசித்திரமானது
உன்னைப் போலவே...

=========

போதை

என் நேசம் உனக்கு 
புளித்துப் போய் விட்டதென சொல்கிறாய்.. 
புளிக்க புளிக்கத்தான் போதை 
நேசிக்க நேசிக்கத்தான் வாதை 

நட்பா? காதலா?


அவளுக்கும் அவனுக்கும் 
ஒருவரையொருவர் பிடித்திருந்தது.. 
அது நட்பா? காதலா? 
என இருவரும் குழம்பித் 
திரிகையில் 
அது காதல்தான் என்று அவளும்
அது நட்புதான் என்று அவனும் 
முடிவு செய்து கொண்டனர்..

அவள் காதலின் அத்தனை கதவுகளையும் 
அலங்கரித்தாள் 
அவன் நட்பின் அத்தனை கனவுகளையும் 
அலங்கரித்தான்.. 
இரவுகள் காத்துக் கிடந்தன..
இருவரின் இணைப்பிற்காக..

தன் காதலை உறுதிபடுத்திக் கொள்ள 
ஒருமுறை அதை பற்றி பேச ஆரம்பித்தாள்..
அவன் நட்பில் உறுதியாய் இருப்பதாகக் 
காட்டிக் கொண்டான்.. 

அவளுக்கு அவனைத் தவிர எந்த யோசனையும் இல்லை..
அவனுக்கு இவள் காதலைப் பற்றி யோசனை இல்லை.. 
அவள் எத்தனை முறைகளில் வெளிக்காட்ட முடியுமோ 
அத்தனை முறையிலும் காதலைச்  சொன்னாள்..
அவன் எத்தனை முறை மறுதலிக்க முடியுமோ 
அத்தனை முறையும் மறுத்து நின்றான்.. 

அவள் தற்கொலை செய்துகொள்வதாக சொல்லியும் 
அவன் பிடிவாதமாக இருந்தான்.. 
சிலநாட்கள் பேசாமல் நகர்ந்தது.. 
ஒருநாள் அவனுக்கு பேச வேண்டும் போல் இருந்தது..
அழைப்பில் வேறு யாரோ பேசினார்கள்.. 
அவள் காணாமல் போய்விட்டதாக சொல்லப்பட்டது..  

அவனுக்கு இப்போது உலகம் இருண்டது போலிருந்தது..
அவள் அளித்த பரிசுப் பொருட்கள், கவிதைகள், கடிதங்கள் 
புகைப்படங்கள் எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்து கதறினான்.. 
அவளின் புகைப்படத்திலிருந்து 
அவனது கண்ணீரை துடைக்க நீட்டிய அவளது கையை 
அவன் இப்போது விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறான்.

வானமும் பூமியும்


கையில் தீக்குச்சியுடன் 
நெருங்கினாய் 
சிரித்து பயந்தபோதும் 
பின்வாங்கவில்லை 
என்னிடத்திலிருந்து 
அருகே வந்து 
என் இதயத் திரியில்
ஒளியேற்றினாய்..
வானமும் பூமியும் 
ஒளிகொண்டது..

நான் நீ


நீ நானாகினாய் 
நான் நீயாகினேன்..
நாம் காதலானோம்

நானும் நீயாகினாய்


நீ எதுவாக மாறினும் 
நான் அதுவாக மாறுவேன்.. 
நீ மழையானாய்
நானும்..
நீ நிலமானாய்..
நானும்..
நீ காற்றானாய் 
நானும்..
நீ நெருப்பானாய்.. 
நானும்..
நீ நீயாகினாய் 
நானும்.

புன்னகை


பல்லாண்டுத் துயரத்தைத் 
துடைத்து எடுத்தாய் 
உன் புன்னகை மயிலிறகால்.

தவம்


என் தவத்தை 
இத்துடன் முடிக்கிறேன்.. 
என் ஆயுளின் வரமாக 
நீயே வந்தபின் 
இனி தவம் எதற்கு?

காதலைவிட


காதல் 
பெரிதில்லைதான் 
காதலைவிட 
எதுவும் பெரிதில்லையே.

இன்னொரு கடவுள் எதற்கு?

இருந்த ஒரே கடவுளையும் 
ஏலத்தில் யாரோ எடுத்துவிட 
இன்னொரு கடவுளை உருவாக்க 
இரண்டு பேர் முயரிசித்துக் கொண்டிருந்தார்கள். 
எனக்கும் ஒரு கடவுளை 
உருவாக்கும் ஆசை வந்தது..
சில தோல்விக்குப் பின் 
அம்முயற்சியை ஒத்தி வைத்தேன். 
என் வேலையில் ஈடுபட்டேன்.. 
பிறர் துன்பத்திற்கு இரங்கினேன்
கொடுமைகளைத் தண்டித்தேன் 
தேவைப்படுவோருக்கு உதவினேன் 
எல்லோரையும் நேசித்தேன்.. 
மீண்டும் கடவுளை உருவாக்கும் 
முயற்சியை தொடங்க நினைத்தேன்,..
அதுசரி, இன்னொரு கடவுள் எதற்கு? 
நானே கடவுளானபின்

சமரசம்



நீயும் நானும் 
ஒரு காளைச் சண்டைக்கு 
தயாராகிறோம்.. 

இருவரையும் வெறித்துப் பார்க்கும் 
மரணம் 
காளையான உன்னிடமோ 
மோதும் என்னிடமோ 
கூடு பாய்ந்து 
யாரோ ஒருவரை 
வீழ்த்தும் என்பது நிச்சயம் 

சண்டைக்கு ஒத்திகை பார்க்குமுன் 
ஒருமுறை சமரசம் பேசிப் பார்க்கலாம் 
என் பெண்மையுடனும் 
உன் ஆண்மையுடனும்..

பயணம்

எப்போதும் 
சாவை வரவேற்கும் 
சாகசத்துடனே 
ஆரம்பமாகிறது 
என் ஒவ்வொரு பயணமும்.. 

துளித் துளி

ஆரம்பத்திலிருந்து
இன்று வரை 
துளியும் மாறவில்லை நான்.. 
ஆரம்பத்தில்ருந்து இன்று வரை 
துளித் துளியாய் மாறியிருக்கிறாய்.. நீ

சுமை

சுவாசம் கூட 
சுமையாகிறது 
அன்பே நீயின்றி.. 

குறும்பயிர்

நீண்ட நெடுங்கால 
வளர்ப்புக்கு காத்திருக்கும் 
பெரும்பயிர் அல்ல...
குறுகிய காலத்தில் 
அறுவடை செய்ய வேண்டிய 
குறும்பயிர் நான்

மனம் - 4

இளமை வெறுத்து 
முதுமை வேண்டிய 
அவ்வையின் முடிவினை 
இப்போது நான் வேண்டி நிற்கிறேன் 
இந்த காதலில் இருந்து விடுபட.. 
=======

மணமுறிவுக்கு 
மருந்து ஆயிரம் உண்டு.. 
மீண்டும் ஒரு மண உறவு.. 
மனமுறிவுக்கு 
மருந்தில்லை 
விரும்பிய மனம்
ஏற்பதை தவிர.. 
=======

நீதான் பேசினா? 
என்று மீண்டும் 
ஒருமுறை 
என்னையே கேட்டுக் கொள்கிறேன்.. 
வசீகரமானவள் 
என்ற நீயா 
வசியம் செய்பவள் 
என சொல்லி நின்றாய்..
என் காதுகள் இன்னும் 
நம்பவில்லை.. 
அது உன் குரல்தானென..
========

நீயென் மீது 
சுமத்தியிருக்கும் பளுவை 
நீயின்றி வேறாரும் 
சுமக்க முடியாது.. 
இன்றைய அதிகாலையிலும் 
கதவோரத்தில் 
காத்திருக்கிறேன் 
இன்றேல் நள்ளிரவில் 
கனவோரத்தில் 
காத்திருப்பேன்.. 
வந்துவிடு 
என் சுமையை இடமாற்ற..
========

கருத்தரிக்குமென் இரவு - 5

முதல் காதல் வெற்றி பெற 
வேண்டுமென்ற 
அவசியமில்லை என்கிறாய்..
நீ என் கடைசிக்காதலென
அறியாமல்.. 
============

உன் விசாரிப்புகளை 
பகிர்வுகளை 
மீண்டும் துவக்கும் போது
எந்த தடையுமின்றி 
என்னிடம் வரும் போது 
என் வலிகளுக்கு
உன் ஸ்பரிசத்தால் 
மருந்திடும்போது 
முன்னிரவுகளைப் போல் 
கருத்தரிக்குமென் இரவு.. 
=======================

வாக்குறுதி எனும்
காப்பீட்டை 
நீ வழங்காததால் 
கேட்கமுடியவில்லை 
எனக்கான இழப்பீட்டை 
=====================

வாகனத்தில் செல்லும்போது 
வந்துமோதும் 
வாடைக்காற்றாய் 
உன் நினைவுகள்.. 
=================

ஏதும் கொடுத்துப் 
பழக்கமில்லாத நீ 
என் இதயக்கூரையை 
பிய்த்துக்கொண்டு கொடுக்கிறாய் 
கடும் வலியை...
================

காதல்

எல்லா காயங்களையும் 
ஆற்றும் காலம்...
காலத்தையே காயத்துக்கு 
உள்ளாக்கும் காதல்..

திரிசங்கு நிலை

என்ன செய்ய?  
இந்த கரிய இரவுகள் 
உன் முகத்தை முழுமையாய் காட்டுகிறதே.. 

என்ன செய்ய?
என் அலைபேசி 
உன் தகவலை சேமித்திருக்கிறதே..

என்ன செய்ய? 
என் தனிமைக்குள் 
நீ விளையாடிய தடயம் ஆழமாயிருக்கிறதே..

என்ன செய்ய? 
என் நினைவுகள் 
உன்னை விலக்க முடியாமல் திணறுகிறதே..

என்ன செய்ய? 
இன்னும் உன்னை 
நேசித்துக் கொண்டிருக்கிறேனே.. 
திரிசங்கு நிலையிலும்

தனிமை

என் இறுதி நாட்களில் 
நீ என் காலருகில் கிடந்து கதறுவாய் 
அப்போது புன்னகைத்திருப்பேன்.. 
உன் தனிமைக்கு துணையாக 
என் கவிதைகளையும்
என் நினைவுகளையும் 
அணைத்துக் கொள்...
அதன் கதகதப்பில் நானிருப்பேன்.

u r in my heart


i want to leave form u
Because i want to live a peaceful life

at the same time 
i need u 
u r in my heart 
u r in my mind
u r in my soul 

how can u leave from me?
if u love me at least only one second in ur life 
u wont leave from me stalin. 

i want to leave from all troubles 
i want to live with u 
i want to win in the world with you

நிகழ்


உழன்று திரிந்து 
அமைதியை இழந்த 
என் இதயத்தின் வேதனைக்கு 
காரணமானவனே 
உன் அமைதியை சிதறடிக்கும் 
நிகழ்வொன்றிற்காக காத்திரு.

உன்னோடு

உன் பரந்த பாதங்களின் 
மத்தியில் 
விழுந்து கிடக்கும் 
என் நினைவுகள் 
நீ நடக்கும் தோறும் 
உறங்கும் போதும் 
உன்னோடுதான் இருக்கும் 
பின்னி பிணைந்து 

புத்தி

புத்தி கேட்டு போய்விட்டதாக 
சொல்கிறாய் 
உண்மைதான் 
உன்னைக் காதலிக்கிறேனே.

காதல்

காதல் இரந்து
பெறக் கூடியதில்லைதான்.. 
காதல் இறந்துவிடக் கூடாதே 

தனிமை

என் தனிமைக்குள் 
அதிகம் வந்து போனது 
நீயாகத்தான் இருக்க முடியும்.. 
என் தனிமை
உன்னால்தானே அளிக்கப்பட்டது
அந்த நள்ளிரவு பேச்சுக்கு பின்..

கிள்ளி

அள்ளித தர 
முடியாவிட்டாலும் 
கிள்ளியாவது கொடு 
சிறிதளவு காதலை

நீயான பின்

ஆயுள் முழுமைக்கான 
வலியினை விட 
ஒரு அந்தி நேரத்தின் 
ஒற்றை மகிழ்வு போதும்.. 
உன் கையிலிருந்து 
தவற விழ மாட்டேன்.. 
இந்த பூமியில்..
என் வானம் நீயான பின்.. 

மீளமை

மரத்துப் போய்விட்ட   
என்னை 
எப்போதும் மீளமைக்க முடியாது 
உன் காதலாலும்

வந்து சொல்

உயிர்த்திருப்பதற்கான 
உபாயமொன்றை 
உனக்கு தெரிந்திருந்தால் 
தைரியமிருந்தால் 
அருகில் வந்து சொல்.. 
இல்லையெனில் 
அங்கேயே நில்.. 
வருகிறேன்.. 
எனக்கு தெரிந்த உபாயமொன்றை 
உனக்கு சொல்ல.

வேண்டும் நீ

என் வேலைகளை 
சரியாக செய்ய வேண்டும் 

என் தோழிகளிடம் 
சிரித்து பேச வேண்டும் 

என் தம்பியோடு 
விளையாட வேண்டும் 

என் காலைப் பொழுதை 
ரசிக்க வேண்டும்.. 

என்னை மீண்டும் 
அழகாக பார்க்க வேண்டும் 

என் கவிதைகளை 
தொடர்ந்து எழுத வேண்டும் 

என் ஆய்வுப் படிப்பை 
மேற்கொள்ள வேண்டும் 

என் ஆரோக்கியத்தை 
தக்க வைக்க வேண்டும் 

என் இரவுகளில் 
நிம்மதியாய் தூங்க வேண்டும்.. 

எல்லாவற்றுக்கும் 
உன்னை மீண்டும் நான் 
அடைய வேண்டும்

அழ வை - 3

அவ்வளவு எளிதானது இல்லை 
ஒரு காதலை அடைவதும்.. 
ஒரு காதலை உடைப்பதும்.. 
========
காதல் 
எப்படியோ ஆரம்பிக்கிறது 
அப்படியே முடியவும் செய்கிறது.. 
========
மிக சுலபம்தான் உனக்கு 
என்னை அழவைபப்து 
மிக கடினம் எனக்கு 
உன்னை அழ வைப்பது 
==========

பேசு - 3

என் வாழ்நாளில் 
ஒன்று குறைகிறது 
நீ பேசாத நாளில்.. 
=========
உன்னோடுதான் பேசவில்லை 
பேசிக் கொண்டேதான் இருக்கிறேன் 
உன்னைபற்றி 
=========
உன்னோடு பேசாத நாளில் இருந்து 
விட்டுவிட்டேன் 
தோழிகளிடம் பேசுவதையும்.. 
=========

காதலின் சுவை

உனக்கு பசிக்க வில்லை 
நீ சாப்பிடவில்லை 
உன் திடம் தெரிகிறது 

எனக்கு பசிக்கிறது 
சாப்பிட முடியவில்லை.. 
என் நிறம் வெளிர்கிறது 

காதலுக்கு பசிக்கிறது 
நினைவுகளை தின்கிறது 
காதலின் சுவை புரிகிறது..

வாழ்க்கை

கிடைப்பவருக்கு 
உன்னை புரிய வைத்து
வாழும் வாழ்க்கைக்கு 
மனதுக்கு 
பிடித்தவரோடு 
புரிந்தவரோடு 
வாழும் வாழ்க்கை 
ஆயிரம் மடங்கு உயர்வானது..

ஒற்றை வார்த்தை


உன்னுடைய 
நினைவுகளிலிருந்து 
என்றும் தூக்கியெறிய முடியாதவளாக 
உன் கனவுகளின் துகள்களிருந்து 
நிராகரிக்க முடியாதவளாக 
நானிருக்கிறேன்.. 
ஒருபோதும் 
நீயிதை மறுத்துரைக்க முடியாது 
என்பதும் எனக்கு தெரியும் 
அந்த ஒற்றை வார்த்தைக்காகத்தான்   
இன்னும் நிற்கிறேன் 
உனது நிழலுக்கு முன்னால்... 

வெற்றி

என் காதல் தோற்கவில்லை
அது வெற்றிபெற்றுவிட்டது..
அதை தக்கவைக்கவே 
போராடுகிறது

காதல் - 45


1
ஆண்டாளின் துயரத்தையும்
மீராவின் துயரத்தையும்
ஒட்டுமொத்தமாய்
சுமத்தி செல்கிறாய்
என் மீது
பிடிவாதமாக...

2
உன்னிலிருந்து
உதிர்ந்த
அந்த ஒற்றை வார்த்தையை
குளிர்பதனப்பெட்டியில்
பதப்படுத்தி வைத்திருக்கிறேன்..
பின்னாட்களில்
அவசியம்
பயன்படுத்தக் கூடுமென..

3
-முன்னர்
எவ்வளவு நெருங்கியிருந்தோமோ
அவ்வளவு விலகியுமிருக்கிறோம்

இன்று
எவ்வளவு ஒதுங்கியிருக்கிறோமோ
நாளை
அவ்வளவு ஒன்றியிருப்போம்

4
உன் நேசம்
என் இதயத்தில் உறைந்தும்
உன் பிடிவாதம்
என் இதயச் சுவர்களில்
கொழுப்பாகப் படிந்தும் விட்டது
இனி என்ன?

5
சந்தித்தலின் மகிழ்வையும்
விடைபெறுதலின் நிமித்தத்தையும்
வெளிப்படுத்துகிறது கைகுலுக்கல்..

உன்னை சந்திக்கும் போது
அது முதலாவது சந்திப்பு
எனத் தோன்றாததாலும்
உன்னைப் பிரியும்போது
அது கடைசி சந்திப்பு
என எண்ணாததாலும்
இதுவரை நிகழ்ந்ததில்லை
நமக்கிடையே கைகுலுக்கல்...

6
வெகுதூரம் போய்விட
எத்தனிக்கும்
உன் எல்லா முயற்சிகளுக்கும்
பின்னால் ஒளிந்திருப்பது
மென்மையான காதலும்
முன்னீடுடைய சமன்பாடுகளும்

7
உன்னை நன்கறிவேன்
உன் வார்த்தைகளில் பொய் விதைத்த போதும்
உன் மௌனத்தால் மறுதலித்த போதும்
நன்கறிவேன்
அதன் பின்னிருந்து
துடித்துக் கொண்டிருக்கும்
என் மீதான அக்கறையை
கையளிக்காத காதலை...

8
இந்த உடலைக்
கடந்துவிட்டால்
விடுதலை கிடைத்துவிடும்
அனைத்துத் தளைகளிலிருந்தும்...

மீண்டும்
நானொரு குழந்தையாய் பிறப்பேன்
உனது குடும்ப உறவுகளில் ஒருத்தியாக
உன்னைப் பார்த்தபடியே வளர்ந்திருப்பேன்

உன் மடிமீது ஏறி விளையாடுபவளாக
உன் தலைமுடியைக் கலைப்பவளாக
உன் கன்னத்தில் முத்தமிடுபவளாக

உன் அக்காவின் மகளாகவோ
உன் அத்தையின் மகளாகவோ
மீண்டும் பிறப்பேன்

இப்போது கடந்துவிடுகிறேன்
நீ விரும்பாத இந்த உடலை மட்டும்
என் ஆன்மாவை
உனக்கு பாதுகாப்பாய் விட்டு...

9
அமைதியிழந்த என் இரவினில்
மீண்டும் மீண்டும்
உள் நுழைந்து அழைக்கிறது
உன் நல்வார்த்தைகள்

கண்ணை மூடி
உறங்க முயற்சிக்கிறேன்
உனது வார்த்தைகள் சூழ்ந்து நிற்கின்றன
உனது குரல் தட்டி எழுப்புகிறது

ஒரு அழிப்பான் கொண்டு
அனைத்தையும் அழித்துவிட முனைந்தால்
என்னால் எழுதமுடியும்
மீண்டும்
உனக்கும் என்க்குமான காதலை

10
எனது நேசத்தை
துச்சமெனக் கருதச் செய்வது
என் உடலெனில் எரித்துவிடுகிறேன்

எனது அக்கறையே
உனக்கு அச்சுறுத்தலாகுமெனில்
நிறுத்திக் கொள்கிறேன்
வெளிகாட்டாமல்

எல்லாவற்றிலும்
முகமூடியைக் கழற்றிவிட்டு
நிர்வாணமாகத்தான் நிற்கிறது
என் வார்த்தைகள்
உன்னைப் போலில்லாமல்

11
என் காதுகளை மூடிக் கொள்கிறேன்
மன்னித்துக் கொள்
உன் வார்த்தைகளை
செவிமடுக்கும் நிலையில்
நானில்லை

உன் பிடிவாதத்தை
பிரதிபலிக்கும் சொற்களை
கேட்கத் தயாராக இல்லை

என்னைக் குதூகலப்படுத்திய
உன் குரலே
இன்று குத்திக் கிழிக்கவும்
நேரம் பார்த்து நிற்கிறது

ஸ்பரிசித்த குரலே
பாம்பின் தீண்டலையும்
செய்யுமெனில்?
வேண்டாம்
என் செவியினை பிணைத்துக்கொள்கிறேன்
மன்னித்துக் கொள்.

12
நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு உணவகத்தில்
உன் கண்ணிலிருந்த அன்பைப் பருகினேன்
என்னிலிருந்த தாகத்தை விழுங்கினாய்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு பூங்காவில்
என் கையைப் பற்றிக் கொண்டாய்
உன் கைமுடிகளை எண்ணினேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு கடற்கரையில்
உன் தோள் தொட்டு விளையாடினேன்
என் நெருக்கத்திற்குள் உறைந்தாய்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு பெரிய கடையில்
எனக்குத் தேவையானதை வாங்கித் தந்தாய்
என் புன்னகையிலும் ஸ்பரிசத்திலும் வசீகரித்தேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்
ஒரு பேருந்து நிலையத்தில்
எனக்கு கண்ணீரை பரிசளித்தாய்
உப்பாய் கரைந்து கொண்டிருந்தேன்
பின்னர்
சர்க்கரைப் படிவங்களாகினேன்

நாம் சந்தித்துக் கொண்டோம்
தினம் இரவுகளில்
மொய்த்துக் கிடக்கிறாய்
ஒரு இரவு கட்டெறும்பாய்
மறு இரவு சிற்றெறும்பாய்
கரையத் துவங்கியது காதல்
நானிப்போது உன் இரவுகளில்
மழை எறும்பாய்..

13
நேற்றை மீட்க முடிந்தால்
அல்லது
நாளையைப் பார்க்க முடிந்தால் 
இன்றில்
இவ்வளவு துயரம் இருக்காதுதானே

நேற்றைய உன் நெருக்கம்
உணர்ந்திருக்கிறேன்
நாளைய உன் உறவு
நம்பியிருக்கிறேன்
இன்றைய உன் விலகல்
தத்தளிக்கிறேன்

14
கையில் மறைத்து வைத்திருக்கும்
இனிப்பைத் தர மறுக்கும்
குழந்தையப் போலதான்
இருக்கிறது
உன் செய்கை
நான் வேண்டியும்
நீ மறைத்துச் செல்லும்
நம் காதல்

15
பூமியைவிட சிறியது உன் பிடிவாதம்
வானத்தைவிட பெரியது என் பிடிவாதம்
இருவரின் பிடிவாதமும் சிதறுகிறது
காதலின் பிடிவாதத்திற்கு முன்..

16
என்னைக் கலைத்த
முதல் மொழி
உன் புன்னகை கலந்த குரல்

17
காலியாகவோ
காலாவதியாகவோ
செய்யாது என் காதல்

18
உலகில் உள்ள
எந்த பொருளும்
திருடக் கூடியதல்ல
எல்லாம் எனக்குள் இருக்கிறது
ஒன்றை மட்டும் திருடுவேன்
நீ தர மறுக்கும் இதயத்தை

19
எதைப் பார்த்தாலும்
எதைக் கேட்டாலும்
எதை உணர்ந்தாலும்
நினைவுக்கு வந்துவிடுகிறாய்
நீ மட்டும்

20
பக்கத்து வீட்டுச் சிறுமி தந்த
ஒற்றைப் பலூனில்
காற்றை நிரப்புகிறேன்
அது உப்புகிறது
பெரிதாக் இன்னும் பெரிதாக

வெடித்துவிடுமென நிறுத்துகிறேன்
அது கையைவிட்டு பறந்து செல்கிறது

அழத்தொடங்கிய சிறுமியும்
பதறிய நானும்
பலூனைப் பார்த்தபடி நிற்க

எங்கிருந்தோ வந்து
சிறுமிக்கு ஒற்றை பலூனையும்
எனக்கு ஒற்றை முத்தத்தையும்
அளித்துப் போனாய்
சிறுமி அழுவதை நிறுத்தியிருந்தாள்
நான் இப்போது அழத் தொடங்கினேன்

21
தாங்கொணாத் துயரத்தில்
எப்போது வேண்டுமானாலும்
உன்னை அச்சுறுத்தும்
மாரடைப்பு வரலாம் எனக்கு

22
ஒரு பொழுதும்
தற்கொலை தீர்வாவதில்லை
எனச் சொல்லி
வழிந்து திணிக்கிறாய்
தற்கொலைக்கான தூண்டுதலை

23
சில நாட்களாய்
புன்னகையில்லை
பகிர்வில்லை
குறுஞ்செய்தில்லை
அழைப்பில்லை
இந்த சில நாட்கள்
நாட்களாகவேயில்லை..

24
உனக்கு பிடித்ததை நானும்
எனக்கு பிடித்ததை நீயும்
கொண்டு வரச் சொல்கிறோம்
நீ துளி நேரத்தில் முடித்துவிடுகிறாய்
நான் துளித்துளியாய் நீடிக்கிறேன்

25
உன்னில் சேமித்து வைத்திருக்கும்
காதலில்
ஒரு கவளத்தையாவது
நீ செரித்திருப்பாயெனில்
வெளித்தள்ளு
ஒரு கண்சிமிட்டலிலாவது

26
என் இரவுகள்
விழித்திருக்கின்றன
உன்னிடமிருந்து
ஒரு வரவேற்பு சொல்லை
எதிர்நோக்கி

27
நீண்ட விவாதத்தில்
நமக்கிடையே
மிச்சமிருப்பவை
என் காதலும்
உன் பிடிவாதமும்

28
மிகவும் உக்கிரமான
தகிப்புடன்
இரவுகளை எரிக்கிறது
அந்த கடுஞ்சொல்...

அதற்கு பிறகு
பலமுறை பெருமழை
பெய்த போதும்
கடுஞ்சொல்லின் அடியில்
தேங்கியிருக்கும் கதகதப்பு
மட்டும் குறையவில்லை

29
சன்னலை அடைக்கையில்
நைந்த விரலின் காயம்பற்றி
உனக்குச் சொல்ல
அழைத்தேன்
நீ தூங்கியெழுந்திருப்பாய்
எனும் உத்தேசத்துடன்
அழைப்பு முழுதாய் சென்று
நின்றுவிட்டது
தவறவிட்ட அழைப்பாகவும்
உணர்த்த முயலும் தத்தளிப்பாகவும்

30
எந்தவித
நிரூபித்தலுக்கும் இடமின்றி
ஒளிந்து கொண்டது
உனது நீ

எல்லாவித
தாக்குதலிலிருந்தும்
தப்பி நிற்கிறது
எனது நான்

31
உன்னிடம்
ததும்பும் புன்னகையை
மறக்காமல் எடுத்து வா
எனக்கு
நீ தந்த காயங்களை
உறையிலிட்டு வருகிறேன்
ஏதாவதொரு
சமரசத்தின் புள்ளியில்
சந்தித்தாக வேண்டும் நாம்


32.
பால் போன்ற
நேசத்தில்
துளி காதலை
உறை ஊற்றினாய்
முழுவதும் உறைந்துவிட்டது
என் நேசம்..


33
சில முயற்சிகளுக்குப் பின்
அலுத்துத் திரும்பும்
என் கனவுகளைத் தேற்றுகிறேன்
விடியும் தூரம் தொலைவில்
இல்லை எனவும்
நம்பிக்கையின் வேர்களில்
ஈரப்பதம் மிச்சமிருக்கிறதெனவும்


34
சலனமின்றி
இருவராலும்
நாட்களை நகர்த்த முடியுமெனில்
நம்மிடமிருப்பது
காதலில்லை
அதே வேளையில்
நட்புமில்லை


35
ஏதோ ஒன்றிற்காகவோ
எதற்காகவோ
என் நினைவு
உன்னைத் தீண்டிக் கொண்டிருந்தால்
நம்பு
நமக்கிடையேயிருப்பது காதலென...

36
உன் மறுத்துரைப்பாலும்
என் மாற்றிக் கொள்ளாத் தன்மையாலும்
அந்நியமாகி நிற்கிறது
நமது அன்யோன்யம்


37
காலத்தைப் போல
முடிவற்றது
என் காதல்

38
கூர்தீட்டப்பட்ட
நமது நேசம்
சில நாட்களாய்
புழங்காமல் கிடக்கிறது
சானை பிடிக்க வேண்டும்
துருப்பிடிக்கத் துவங்கும் முன்

39
தப்பிச் செல்வதற்கு
போதுமானதாயிருக்கும்
இடைவெளியை
இட்டு நிரப்புகிறேன்
தொடரும் நினைவுகளாலும்
படரும் காதலாலும்

40
சாகசமாயும்
சாமர்த்தியமாயும்
நிகழ்த்திவிடுகிறாய்
என் மீதொரு வன்முறையை

பாசாங்கற்று ஏற்றுக்
கொள்வதைத் தவிர
வேறெந்த புனைவுகளையும்
அறிந்திருக்கவில்லை
ஒப்பீடற்ற என் நேசம்


41
நமக்கிடையேயான
இடைவெளி
அதிகமாகும் போது
அதில் உணரப்படும்
காயங்களும்
கண்ணீருமே
மீண்டும்
நம்மை பிணைத்து வைக்கும்
பாசாங்கற்ற மஞ்சள் வெளியில்

42
இரண்டு முறை
திரும்பிப் பார்த்தாலே
மூன்றாம் முறை எதிர்பார்ப்போம்
இரண்டு வருடம்
விரும்பி பேசிவிட்டு
மூன்றாம் வருடம்
முரன்டு பிடிக்கிறாயே
எவ்வகையில் நியாயம்?

43
என் சாவிற்காக அரண்டு
ஒத்துக் கொள்ளாதே
என் காதலுக்காக மிரண்டு
ஏற்றுக் கொள்ளாதே
என் சாவை விட
என் காதல்
உன்னை அணுஅணுவாய் கொல்லும்

44
ஆசை 60 நாளில்
முடியலாம்
மோகம் 30 நாளில்
முடியலாம்
என் காதல் முடியாது
என் ஆயுளுக்குப் பின்னும்

45
சர்க்கரை வியாதி
வந்த என் தாத்தாவுக்கு
காலை எடுத்துவிட்டோம்

காதல் வியாதி
வந்த எனக்கு
இதயத்தை அகற்றித்தான்
ஆகணுமோ?