அனாதையாய்
திரியுமென் எழுத்துக்களை
காப்பற்றலாம்
நானில்லாத நாளிலும்..
உன் அன்பிற்கேங்கும்
என் நேசத்தை
எப்படி காப்பாற்றுவாய்
நானில்லாத போது?
வாழ்தலின்றி..
==========
எனக்காகவும் வேண்டாம்
உனக்காகவும் வேண்டாம்
தனித்தழும்
காதலின் குரலுக்காவது
செவி கொடு..
உனக்கு துணையிருக்கும்..
நீ உடல்வலிமையிழந்த காலத்திலும்..
==========
அவ்வப்போது
மழித்துவிடுகிறாய்
மீசையை மட்டுமின்றி
என் மீதான ஆசையையும்..
===========
No comments:
Post a Comment