Friday, January 21, 2011

காதல்(2)

உனது கரங்களால் 
ஆசிர்வதிக்கப்படாத 
என் உணர்வுகள் 
மீளத் துடிக்கிறது 
யாவற்றிலுமிருந்து.. 
சபித்துக் கொண்டே 
பிடிதளர்த்த மறுக்கிறாய்..
ஒரு சாபத்தையும் 
ஒரு ஸ்பரிசத்தையும் வைத்து 
வாழ்ந்திடக் கூடியதல்ல..
எனது நான்.. 
==========
உலகை மாற்ற அல்ல 
உன்னை மாற்றவாவது 
என் கவிதை 
நெருப்பு பற்ற வைக்குமெனில் 
அதன் சாம்பலில் 
மிச்சமிருக்கும் என் காதல்.. 
==========

No comments:

Post a Comment