அன்பை வார்த்தைகளில்
சொல்வதை விட
மிக இலகுவான செயல் எதுவுமில்லை..
அன்பை எழுத்துக்களில்
பதிய வைப்பதை போல
மிக துயரமான கவிதை எதுவுமில்லை..
அன்பை புரிந்து கொள்ள
மறுப்பது போல
மிக மோசமான வலி எதுவுமில்லை..
அன்பை தயவு தாட்சண்யமின்றி
மறுதலிப்பது போல
ஒரு பெருஞ்சோகம் எதுவுமில்லை..
அன்பை அது எவ்வளவு ஆழமாயினும்
புறக்கணிப்பது போல
மிகக் கொடிய வேதனை வேறெதுவுமில்லை..
====================
எனக்காக காத்திருத்தாய்
சில நொடிகள்
உனக்காக காத்திருக்கிறேன்
நொடிநொடியாய்..
எனக்காக விழித்திருந்தாய்
சில இரவுகள்
உனக்காக விழித்திருக்கிறேன்
ஒவ்வொரு இரவும்
எனக்காக வாழத் துணியவில்லை
இன்னும் நீ
உனக்காக வாழ்ந்திருக்கிறேன்
மரணத்தின் நெடியிலும்
======================
No comments:
Post a Comment