Friday, January 21, 2011

வானம்(5)

அந்தரத்திலிருந்து 
கீழே நோக்குகிறேன் 
வானமாய் 
காட்சியளிக்கிறது பூமி... 
பூமியில் இருந்து 
வானத்தை பார்க்கிறேன் 
தென்படவே இல்லை 
பூமியைப் போலொரு வானம்.. 
=======
விமான நிலைய 
பரிசோதனையைப் போல 
என் காதலை கேள்வி கேட்கிறாய்.. 
அனைத்தும் சரியாகவிருந்தும் 
தடுமாறுகிறேன்.. 
முதல்முறை பயணிக்கும் 
பயணியாய் 
=======

என் நேசம் 
கூடுகிறது.. 
நாளாக ஆக 
உயரும்
விமானபயணச் சீட்டாய்
=======
 மேலெழும்பி 
பறக்க எத்தனிக்கிறது.. 
ஓடுதளத்தில் இருக்குமென்
காதல்
=======
வானிலை சரியில்லாமல் 
மீண்டுமொரு நல்லறிவிப்புக்காய் 
விழித்திருக்கிறது என் இரவு..
=======

No comments:

Post a Comment