எந்த உத்திரவாதமுமின்றி
நகரும் என் பொழுதுகள்
எந்த உறுதியுமில்லாது
நீ சிந்தும் புன்னகை
எந்த நிர்பந்தமுமின்றி
பெருக்கெடுக்கும் நேசம்
ஏதோ ஒரு காரணத்தால்
மறைக்கப்படும் உண்மை
எதற்கும் துளியளவு கூட
சந்தேகமில்லை
நீயும் நானும்
கொண்டிருக்கும்
நம்பிக்கை பற்றி.
No comments:
Post a Comment