Friday, January 21, 2011

நேசம் (7)

உனக்கான 
வரையறைகளை 
தகர்ப்பது குறித்து 
யோசிக்கிறேன்..
எனக்கென 
ஒரு வரையறையுடன்..
===========
*
பராமுகமாயிருக்கும் 
உன்னிடம் 
மண்டியிட்டு வேண்டி நிற்கிறேன்
என்னையாவது 
எனக்கு திருப்பி தருவாயென
===========
*
அவதானிக்க முடிகிறது 
உனக்குள்ளிருக்கும் 
அத்துணை தர்க்கங்களையும் 
நீ முகமூடி தரித்திருக்கும் போதும்.
===========
*
என் சுயம் 
தொலைத்த நாட்களை 
நன்கறிந்த நீயேதான் 
அதற்கு 
காரணமான நீயேதான் 
எப்படி தொலைக்கலாம் 
என கேள்வியும் கேட்கிறாய்.. 
என் சுயம் இப்போது 
செத்துக் கிடக்கிறது
உன் கேள்வியில்..
============
*
என் நேசம் 
காத்துக் கிடக்கிறது 
ஒரு ஒப்பந்தத்திற்காக மட்டும்.. 
=============
*
விரட்டிக் கொண்டே இருக்கிறது
உன் நினைவுகள் 
வானுயர்ந்து 
கடல் கடந்து
ஆயிரமாய் 
ஆட்கள் அருகிருந்த போதும்..
=============
*
உன் கௌரவத்தை 
தாக்குவதாக 
அமைந்துவிடாதென் காதல் 
உன் மீதான 
காதலே கெளரவமானது அன்பே.. 
==============

No comments:

Post a Comment